11 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
மார்ச்-26 ம் தேதி நடைபெற இருந்த 11 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடிநடக்கும். டாஸ்மாக் கடைகள் நாளை(மார்ச்-24)முதல் மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 433 ஆக உயர்வு
கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவில் 433 பேருக்கு உறுதியாகி உள்ளதாகவும் அதில் புதிதாக 37 பேருக்கு பரவியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
11, மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும்
உயர்நீதிமன்ற உத்தரவுபடி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும் என பள்ளிகல்விதுறை தெரிவித்துள்ளது. தேர்வு நேரம்: 10.30 டூ 1.45 மணி .
கொரோனா : கேரளா மாநிலம் முடக்கம்
கோரோனா வைரஸ் தொற்று பரவலால் கேரள மாநிலம் முடக்கப்பட்டுள்ளதாக அம் மாநில அரசு தெரிவித்துள்ளது.
கோவையில் 387 பேர் கண்காணிப்பு
கோவையில் 387 பேர் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் 40 பேர் வெளிநாடுகளில் இருந்து கோவை வந்தவர்கள் ஆவர்.
விமான சேவைகள் முடக்கம்

இந்தியாவில் நாடு முழுவதும் விமான நிலையங்கள் ( நாளை முதல் 24 ம் தேதி நள்ளிரவுக்கு பின்) மூடப்படுகிறது . இது போல் உள்நாட்டு விமான சேவைகள் முடக்கப்படுகிறது.
3 லட்சத்து 45 ஆயிரத்து 289 பேர்

இன்று (23 ம் தேதி ) மாலை 4 மணி நிலவரப்படி கொரோனாவால் உலக அளவில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 924 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எல்லை மூடல்
ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து நாமக்கல் மாவட்டம் கொமரபாளையம் செல்லும் பாலத்தில் ஈரோடு, நாமக்கல் மாவட்ட போலீசார் தடைவிதித்தது தடுப்பு அமைத்து உள்ளனர்.
2இல் 1 வது புகைப்படம்
தமிழகத்தில் 144 தடை உத்தரவு
தமிழகத்தில் நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் 3 ஆயிரம் வீடுகள் தனிமை
சென்னையில் 3 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன. கொரோனா தொற்று, உள்ளே நுழையாதே என போஸ்டர் ஓட்டப்படும்.
ஈரோட்டில் கொரோனா மருத்துவமனை
ஈரோட்டில் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பெருந்துறை அரசு மருத்துவமனை கொரோனா மருத்துவமனையாக மாற்றப்படுகிறது. - கலெக்டர் கதிரவன்.
பஞ்சாபில் முழு ஊரடங்கு
பஞ்சாபில் முழு அளவில் ஊரடங்கை அமல்படுத்த உத்தரவு.
ராமநாதபுரத்தில் கடைகள் மூடல்
ராமநாதபுரத்திலும் அனைத்து கடைகளையும் அடைக்க கலெக்டர் உத்தரவு.