சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் பிப்ரவரி 19 என முடிவானது எப்படி? - ஒரு சர்ச்சையின் வரலாறு

இந்து நாட்காட்டியின்படி பிறந்த நாளை கொண்டாடுவதா அல்லது தற்போது பயன்பாட்டில் உள்ள கிரெகோரியன் நாட்காட்டியின்படி பிறந்த நாளைக் கொண்டாடுவதா என்பது பற்றி பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. எனவே, சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் கொண்டாடம் குறித்து ஆண்டுதோறும் வாதங்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது.


பிப்ரவரி 19 ஆம் தேதி சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளை முதல்வர் உத்தரவ் தாக்கரே கொண்டாடுவார் என்று மகாராஷ்டிர மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் அனில் பராம் அறிவித்துள்ளார். ஆனால், அரசியல் கட்சி என்ற வகையில், சிவசேனை கட்சி, இந்து நாட்காட்டியின்படி சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளது.


இந்த மாறுபட்ட கருத்துகளின் பின்னணியில், மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் எப்படி தீர்மானிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள நாம் முயற்சி செய்வோம்.


மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் 1630 பிப்ரவரி 19 என்று இப்போது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இது - Falgun Vadya Trutiya, Shake 1551 Shukla Samvastar திதிக்கு உரிய நாளாக உள்ளது. முன்னர் Vaishakh Shuddha Dwitiya Shake 1549 திதி சிவாஜியின் பிறந்த திதியாகக் கருதப்பட்டு வந்தது. கிரெகோரியன் நாட்காட்டியின்படி அது 1627 ஏப்ரல் 6ஆம் தேதி வருகிறது.