இன்றே கடைசி; மேட்டூர் அணையில் இருந்து இனி தண்ணீர் கிடையாது

அறுவடை தொடங்கவுள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் இன்று மாலையுடன் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன்மூலம் அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.