வாழக்கையில் நம் தேவைகளுக்காக வருடம் முழுக்க ஓய்வில்லாமல் வேலை பார்க்கிறோம். அப்படிச் செய்யும் போது நம் உடலும் மனமும் ஒரேடியாக சோர்டைந்து விரக்தியாக உணரச்செய்கிறது. இப்படிப்பட்ட நிலையில், நமக்கு நிச்சாயமாக எந்த வித மன அழுத்தமும், தலைவலியும் அற்ற நிம்மதியான நேரமும் மகிழ்ச்சியான சூழலும், உடலுக்கும் மனதுக்கு மிகுந்த ஓய்வும் தேவைப்படுகிறது.
இவ்வாறு நினைக்கும் போது தான் மக்கள், தற்காலிகமாகத் தங்கள் வேலைகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு எங்காவது வெகு தூரமான, தொல்லையற்ற இடங்களுக்குச் செல்கின்றனர். சரி தான், வாழ்க்கையின் எல்லா நேரத்திலும், வேலையில் இருக்கும் டென்ஷன், குடும்பத்தில் இருக்கும் பாரம், சமூகத்தில் நம்மை சுற்றி நடக்கும் பிரச்சணைகள் என எல்லாவற்றையும் தலையில் ஏற்றிக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்க நாம் இயந்திரம் அல்ல...
மனிதர்கள் கண்டிப்பாக ஒரு காலகட்டத்தில் இந்த அன்றாட நடைமுறைகளை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு நிம்மதியாக இருக்கவே விருப்பப்படுகின்றனர். அது நிச்சயம் தேவை தான். ஒரு சிலர் தம்பதிகளாக தன் மனைவி அல்லது காதலி என ஒரு நல்ல இணையோடும், ஒரு சிலர் குடும்பத்தோடும், ஒரு சிலர் நண்பர்களோடு கூட்டாகவும் சுற்றுளா செகின்றனர்.