கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லை. இதனால் காலம் தாழ்த்தி ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது அணை நீர்மட்டம் 101.22 அடியாகவும், நீர் இருப்பு 66.43 டி.எம்.சியாகவும் இருந்தது.
அதன்பிறகு பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த ஆண்டில் மட்டும் நான்கு முறை அணை முழு கொள்ளளவை எட்டியது.
கர்நாடகா கடந்த ஆண்டு கூடுதலாக 85 டி.எம்.சி வழங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது 169 நாட்களாக 150 டி.எம்.சி தண்ணீர் டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அறுவடை நெருங்குவதால் நீர்திறப்பு குறைக்கப்பட்டு வந்தது.
சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.