ஹரிஷ் கல்யாணை டேட் செய்யணும், செய்யட்டுமா?: ரசிகர்களிடம் கேட்ட ரைசா

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சனும், ஹரிஷ் கல்யாணும் சேர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார்கள். அதன் பிறகு ஹரிஷ் கல்யாண் நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்தார் ரைசா. படத்தில் அவர்களுக்கு இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது.


நிஜத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர். ரைசா, ஹரிஷ் ஜோடி சூப்பர் ஜோடி என்று ரசிகர்கள் கூறி வரும் நிலையில் அவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

 

தமிழகத்தை மகிழ்ச்சிபடுத்த நான் ஹரிஷ் கல்யாணை டேட் செய்யத் துவங்க வேண்டும். நான் இதற்கு முன்பு இப்படி செய்தது இல்லை. எப்படி டேட் செய்வது என்றும் தெரியாது. ஒருவரிடம் எப்படி கேட்பது என்று
ட்வீட் செய்துள்ளார் ரைசா வில்சன். மேலும் தான் ஹரிஷ் கல்யாணை டேட் செய்ய வேண்டுமா இல்லையா என்று ரசிகர்களிடம் கேட்டுள்ளார் ரைசா.