நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போடுகிறேன் - டெல்லிக்கு சிக்னல் கொடுத்த ராமநாதபுரம் ஏட்டு!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்பயாவை கொடூரமாக வன்கொடுமை செய்து கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் ராம்சிங், மகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்தர் தாக்கூர் மற்றும் 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

 

இதில் சிறுவனுக்கு மட்டும் சிறார் நீதி சட்டப்படி அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

எஞ்சிய 4 பேருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை உறுதி செய்தன. ஆனால் தூக்கு தண்டனையை நிறைவேற்ற திகார் சிறையில் ஆட்கள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.