ஆபாசப் படத்தைப் பரப்பிய குழுவினர், எகிப்து வெங்காயம், பாபர் மசூதி விவகாரம் என முக்கிய செய்திகள் 2 நிமிட வாசிப்பில்!

வெங்காயத்தின் விலைக் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வெங்காயத்தின் வரத்து குறைந்தது. இதையடுத்து, எகிப்து நாட்டிலிருந்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த இறக்குமதி நடந்தாலும், வெங்காய விலையில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை. ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 140 முதல் ரூ. 160 வரை விற்கப்படுகிறது.


அயோத்தி பாபர் மசுதி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, இந்து மகாசபா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் அமையவுள்ள நிலையில், மசுதிக்கு இடம் வழங்க சொல்லி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக இந்து மகா சபா சீராய்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.