மூன்று கோல் அடித்து மிரட்டிய ஏடிகே.. ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி தோல்வி

கொல்கத்தா : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஏடிகே - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் ஏடிகே அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.


6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 19 ஆம் நாள் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுப பாராதி சிரிங்கன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இதில் ஏடிகே - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் அதிரடியாக மோதின. டாஸ் வென்ற ஏடிகே - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் ஏடிகே அணி வலது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.


ஆட்டத்தின் 3 ஆவது நிமிடத்திலேயே ஜாம்ஷெட்பூர் அணியின் பெரேராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் ஆக்ரோஷத்துடன் ஆடின.